ஸ்ரீ ச்யாமளா தண்டகம்

ஸ்ரீ ச்யாமளா தண்டகம்!!

மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம் |
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி ||

சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே குசோன்னதே குங்கும ராகஸோனே |
புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண- ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||

ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையே சியாமளா தேவி. இவள் அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில்லைக் கொண்டு அறிவு என்னும் தத்துவம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால்தான் மனதையும் அறிவையும் எளிதில் அம்பிகை யிடம் லயிக்கச் செய்ய முடியும்.

ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் மந்திரியாகவும் விளங்குவதால், சியாமளா தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. எனவே சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே பரமேஸ்வரி எதையும் செய்வாள். அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்டவள் சியாமளா தேவி. மன இருளையகற்றி ஞான ஒளியைத் தருபவள் இவள்.

தேவியின் தசமகா வித்தைகளில் (பத்து வடிவங்கள்) ஒன்பதாவது வித்தையாக விளங்குபவள் சியாமளா தேவி. உஜ்ஜயினியில் இந்த தேவியை வணங்கியே, மூடனாயிருந்த காளிதாசன் மகாகவியானான். பிரம்மதேவனின் மானசை புத்திரர்களில் ஒருவரான மதங்க முனிவரின் மகளாகப் பிறந்தவளே இந்த தேவி. இதனால் இவள் மாதங்கி என்னும் பெயரையும் பெற்றாள்.

சியாமளா தேவியை உபாசிப்பவர்களுக்கு வாக்குப் பலிதம், இசை, கல்வி, கேள்விகளில் நல்ல தேர்ச்சி போன்றவை உண்டாகும். இவளருளால் அனைத்து செல்வங்களும் குறைவற வழங்குவான் குபேரன்.

மாதங்கியின் பதினாறு பெயர்கள் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. அவை சங்கீத யோகினி, சியாமா, சியாமளா, மந்த்ர நாபிகா, மந்த்ரிணி, சசிவேசானி, ப்ரதானேசி, சுகப் பிரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணி, பிரிய கப்பிரியா, நீபப்பிரியா, கதம்பேசி, கதம்பவன வாசினி, சதாமாதா ஆகியவையாகும்.

மாதங்கி தேவி எட்டு கைகளை உடையவள். ஒரு கையிலுள்ள சம்பா கதிர் உலகியல் இன்பங்களையும்; மற்றொரு கரத்திலுள்ள தாமரை மலர் கலை உள்ளத்தையும்; இன்னொரு கரத்திலுள்ள பாசம் ஈர்ப்பு சக்தியையும்; வேறொரு கரத்திலுள்ள அங்குசம் அடக்கியாளும் திறனையும்; காரிகை உலகியல் ஞானத்தையும்; கிளி ஆத்ம ஞானத்தையும்; இரு கைகளில் ஏந்திய வீணை சங்கீத ரசனையையும் அருளுகின்றன. காளிதாசனின் சியாமளா தண்டகம் மேற்கண்ட வடிவுடைய தேவியையே போற்றுகிறது. பேரருள் தரும் தேவி துதியாக சியாமளா தண்டகம் விளங்குகிறது.

இத்தகைய எட்டு கரங்களுடைய சியாமளா தேவியின் திருவுருவத்தை காஞ்சி காமாட்சி யம்மன் கோவிலில் காணலாம். மந்திர சாஸ்திரப்படி மதுரை மீனாட்சியே சியாமளா தேவியாக விளங்குகிறாள். எண் கை வடிவமும் சக்கரமும் இதன் அடிப்படையிலேயே அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

சியாமளாவிற்கு மூன்று அங்க- உபாங்க தேவதைகள் உள்ளனர். லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி எனப்படும் அவர்களைப் பற்றி காளிதாசனின் சுலோகங்களையும் அதற்கான விளக்கங்களையும் இங்கு காண்போம்.

லகு மாதங்கி!

“மாணிக்க வீணாம் உபலாலயந்தீம்

மதாலஸாம் மஞ்சுள வாக்விலாஸாம்

மஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்

மாதங்க கன்யாம் மனஸாஸ்மராமி.’

மாணிக்கமயமான வீணையை வாசிப்ப வளும், அழகான வாக்கு உடையவளும், நீலநிற ஒளி பொருந்திய உடலினளும், மதங்க முனிவரின் மகளுமான இவள் அருள் இருந்தால் அனைத்து கலைகளும் லகுவாகும். (எளிதாகும்.)

வாக்வாதினி!

“அமலகமல ஸம்ஸ்தா லேகினி புஸ்தகோத்யத்

கரயுகள ஸரோஜா குந்த மந்த்ரகௌரா

த்ருதசதா கண்டோல்லாஸி கோட்ரபீடா

பவதுபவ பவபயானாம் பங்கின பாரதி ந.’

நம் சந்தேகங்களை குருவிடம் கேட்டு அறிய வேண்டும் என்பதே வாக்வாதினியின் பொருள். அடிக்கடி குருவிடம் சென்று நம் சந்தேகங்க ளைக் கேட்டாலொழிய உண்மைப் பொருளை அறிய முடியாது. சில விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்தால்தான் உண்மையை உணர முடியும்.

நகுலி!

ஞானத்தை அடைந்தால்கூட தவறு செய்வதற்கான சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். விஷம் போன்ற அத்தவறுகளால் நாம் பாதிக்கப்படாமல் காப்பாற்றுபவள் நகுலி. (நகுலம் என்றால் கீரிப்பிள்ளை. கீரியைக் கண்டு விஷப் பாம்புகள் அஞ்சி விலகு வதைப்போல நகுலியின் அருளால் தவறுகள் நம்மை விட்டு விலகிச் செல்லும்.)

அறிவுத் தத்துவம் மட்டுமே ஞானம் பெற போதுமானதல்ல. தடைகளைத் தகர்த்து ஞானம் பெறவே உபாங்க தேவதைகளின் துதிகளும் உபாசனைகளும் கூறப்பட்டுள்ளன. சியாமளா சகஸ்ரநாமம், ராஜமாதங்கி சகஸ்ரநாமம் என இரண்டு அதியற்புதமான சகஸ்ரநாமங்கள் உள்ளன. இவற்றைத் துதித்துப் பயனடையலாம். காளிதாசனின் சியாமளா தண்டகமும் மிக அற்புதமானதே.

ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையே சியாமளா தேவி. இவள் அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில்லைக் கொண்டு அறிவு என்னும் தத்துவம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால்தான் மனதையும் அறிவையும் எளிதில் அம்பிகை யிடம் லயிக்கச் செய்ய முடியும்.

ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் மந்திரியாகவும் விளங்குவதால், சியாமளா தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. எனவே சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே பரமேஸ்வரி எதையும் செய்வாள். அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்டவள் சியாமளா தேவி. மன இருளையகற்றி ஞான ஒளியைத் தருபவள் இவள்.

தேவியின் தசமகா வித்தைகளில் (பத்து வடிவங்கள்) ஒன்பதாவது வித்தையாக விளங்குபவள் சியாமளா தேவி..

கதம்பவனவாஸினீ’ என்றும் இந்த அம்பிகை துதிக்கப்படுகிறாள். ஸ்ரீ லலிதா தேவியின் வாசஸ்தலமான ஸ்ரீ நகரத்தில், சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்வதாலேயே சியாமளா தேவிக்கு இந்த திருநாமம். மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள். மதுரைக்கு ‘கடம்பவனம்’ என்ற ஒரு பெயரும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

‘கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிசேவிதா’… (ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்)
गेयचक् ररथारूढ मन्त्रिणी परिसेविता ….. ललिता सहस्रनाम स्तोत्रम्
பண்டாசுர வதத்தின் போது, கேயசக்ர ரதத்தில் இருந்து அம்பிகைக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசுரனின் தம்பியான விஷங்கனை வதம் செய்தாள்.

‘மந்த்ரிண்யம்பா -விரசித- விஷங்கவத- தோஷிதாயை நம: ” … (ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்).
मन्त्रिण्यम्बा विरचितव िषङ्गवध तोषिता ….. ललिता सहस्रनाम स्तोत्रम्
சூக்ஷ்ம அர்த்தங்களின்படி பார்த்தால், அகங்காரம் மிகுந்த ஜீவனே ‘பண்டாசுரன்’ (உலகாயத) விஷயங்களில் ஜீவனுக்கிருக்கும் ஆசையே விஷங்கன். மேலும், குறுக்கு வழியில் செல்லும் புத்தியையும் விஷங்கன் குறிக்கிறான். சியாமளா தேவி, நேர்வழியில் செல்லும் மனதிற்கும் புத்திக்கும் ஆத்மஞானம் அறியும் மனநிலைக்கும் அதிபதி. ஆகவே, சியாமளா தேவியே ‘விஷங்க வதம்’ செய்கிறாள்.

ஸ்ரீ லலிதோபாக்கியானம், ‘சங்கீத யோகினி சியாமா, ச்யாமளா, மந்திர நாயிகா’ என்று துவங்கி அம்பிகையைப் போற்றுகிறது.

Leave a comment